தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டி, மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ராஜபாளையம் ஜவர் மைதானம் பகுதியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி தலைமையில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டத்தில் உயிர்க்கொல்லி தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லா காலங்களில் பத்தாயிரம் உதவித் தொகை வழங்கிட வேண்டும் எனவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசிற்க்கு எதிராக கண்டன கோஷமிட்டனர்.