தேவர் சிலைக்கு அணிவிக்கப்படவுள்ள தங்க கவசம்: பசும்பொன் சென்றது.

மதுரை, அண்ணாநகரில் உள்ள அரசு வங்கியில், பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின், முழு உருவ தங்கக் கவசத்தை, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வர் ஒபீஎஸ். தேவரின் வாரிசுதாரரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தார்.இந்த கவசம், உடனடியாக கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்துக்கு கார் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்