நலிவடைந்த திரைப்பட நடிகர் நடிகையருக்கு தீபாவளி திருநாளை ஒட்டி வேட்டி சேலை வழங்கும் விழா.

மதுரையில் தமிழக திரைப்பட துணை நடிகர்கள், நடிகைகள், திரைப்பட உதவியாளர்கள் நல சங்கத்தின் சார்பாக தீபாவளியை முன்னிட்டு முப்பெரும் விழாவாக இலவச வேஷ்டி, சேலை வழங்கும் விழா, பாராட்டு விழா, விருது வழங்கும் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.விழாவிற்கு நிறுவனத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ஆர்.வெங்கடேசன் வணிகர் சங்க பேரவை தலைவர் ராஜபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தேமுதிக மதுரை மாவட்ட வடக்கு பகுதி பொறுப்பாளர் வி.பி.ஆர்.செல்வகுமார், அறிவோம் அறக்கட்டளை நிறுவனர் வடுகப்பட்டி செல்வம் இணைந்து இலவச வேஷ்டி, சேலைகள் மற்றும் மற்றும் விருதுகளும் வழங்கினார்கள். குறும்பட இயக்குனரும், நடிகரும், சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர், தமிழ்நாடு கல்சுரல் அகாடமி டிரஸ்ட் நிறுவனர் விஜயபாரதி மற்றும் நடிகர்கள், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் அரசியல் பிரமுகர் ராஜ்குமார், திரைப்படத் தயாரிப்பாளர் சண்முகராஜ், பேங்க் மேனேஜர் ஓய்வு எல்.இருதயராஜ், பழனிச்சாமி, ஐ.டி.மணி, லீ பரடைஸ் விஸ்வா டவர் கே.எல் சுப்ரமணியன், வஜ்ரா நிறுவனத் தலைவர் சோலார் சுப்பிரமணியன், வெற்றி திருமண தகவல் மையம் நிறுவனர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ராஜேந்திர குமார் நன்றி கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்