தூய்மை பாரதம் விழிப்புணர்வு ஓவியங்கள்.

மதுரை, திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தூய்மை பாரதம் விழிப்புணர்வு சுவர் ஓவியங்களை திருவேடகம் பஞ்சாயத்து சுவரில் வரைந்தனர்.75-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தினை முன்னிட்டு, அந்தந்த பகுதிகளில் பொதுமக்கள் பார்க்கும் வண்ணம் உள்ள பொதுச் சுவர்களில் தூய்மை பாரதம் குறித்த விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் வரைய வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்பாண்டியன் கேட்டுக் கொண்டதின் பேரில், விவேகானந்த கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் திருவேடகம் பஞ்சாயத்து அலுவலக சுவரில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர். மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் ஓவிய நுணுக்கங்களை கூறி ஓவியம் வரையும் நிகழ்வை தொடங்கி வைத்தார். வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர்நாகராஜ், திருவேடகம் ஊராட்சித் தலைவர்பழனியம்மாள், நிர்வாக அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர்.அசோக்குமார் முனைவர் ரமேஷ் குமார் முனைவர் ராஜ்குமார்தினகரன் மற்றும்ரகு ஆகியோர் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்