பழையனூர் பகுதியில் ஆறாம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் பணி. சாரணிய மாணவிகள் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு

திருவண்ணாமலை அடுத்த பழையனூர் பகுதியில் ஆறாம் கட்ட தடுப்பூசி முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பிரம்மானந்தன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி அவர்களின் ஆலோசனையின் பேரில் பழையனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கோ.பிரம்மானந்தன் தலைமையில் திருவண்ணாமலை பாரத சாரண இயக்கத்தின் மாவட்ட பயிற்சி ஆணையரும் , பட்டதாரி ஆசிரியருமான கலைவாணி மற்றும் சாரணிய மாணவர்கள் 6 – ம் கட்ட தடுப்பூசி முகாம் பணி மற்றும் கிராமப்புற பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.சாரணர் இயக்கத்தின் மாவட்ட பயிற்சி ஆணையர் கலைவாணி மற்றும் சாரண மாணவர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களும் மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ள டோக்கன் வழங்கினார். இந்நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது