Home செய்திகள் படியில் நின்ற மாணவர்கள். பாதியிலேயே பேருந்தை நிறுத்தி சென்ற ஓட்டுநர். நடுரோட்டில் நின்ற பயணிகள்.

படியில் நின்ற மாணவர்கள். பாதியிலேயே பேருந்தை நிறுத்தி சென்ற ஓட்டுநர். நடுரோட்டில் நின்ற பயணிகள்.

by mohan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் வத்தலக்குண்டில் இருந்து நிலக்கோட்டை அணைப்பட்டி வழியாக தினம்தோறும் உசிலம்பட்டி அருகே உள்ள விக்கிரமங்கலம் தெற்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் உசிலம்பட்டி நிலக்கோட்டை மற்றும் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த மக்கள் தினமும் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை வத்தலகுண்டில் இருந்து உசிலம்பட்டி பேருந்து சென்றது. பேருந்து நிலக்கோட்டை பகுதியைத் தாண்டிச் சென்றது. நிலக்கோட்டை பள்ளி மாணவர்கள் மற்றும் சுற்றுப்புற மாணவர்கள் அதிக அளவில் பேருந்தில் ஏறினார் இதன்காரணமாக பேருந்தில் அதிகளவு கூட்டம் இருந்தது.கூட்டத்தை கட்டுப்படுத்தவும் மேலும் படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களை படிக்கட்டில் தொங்காமல் பேருந்தின் உள்ளே வரச் சொல்லியும் நடத்துனர் பலமுறை மாணவர்களிடம் கூறினார் ஆனால் மாணவர்களோ நடத்துனர் சொல்வதை எதையும் கேட்கவில்லை. இதன் காரணமாக அணைப்பட்டி அருகிலுள்ள திரவியநகர் என்றார் பகுதிக்கு பேருந்து வந்தது ஓட்டுநரும் மாணவர்களிடம் உள்ளே செல்லுமாறு கூறினார் ..ஆனால்  மாணவர்கள் கேட்காததால் அதே இடத்தில் பேருந்து நிறுத்திவிட்டு அரசு பேருந்து ஓட்டுநர் சென்றுவிட்டார். இதனால் பேருந்தில் வந்த பொது மக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டு நிலக்கோட்டை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினரும் நேரில் வந்தனர். இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் பேருந்து நடுப் பகுதிக்கு சென்றதால் காவல்துறையினர் மற்றும் பேருந்தில் வந்த பயணிகள் அரசு பேருந்து ஓட்டுநர் இடம் இதுபோன்ற தவறை இனி நடக்காது என்று கூறியதை அடுத்து மீண்டும் பேருந்து உசிலம்பட்டி நோக்கி சென்றது… பேருந்து நடுவழியில் நிறுத்தப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

நிலக்கோட்டை செய்தியர்ளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!