செய்தி எதிரொலி. சரி செய்யப்பட்ட சாலைகள்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையில் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர் இந்த நிலையில் அப்புகாரின் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்ட கீளை நியூஸ் மோசமான சாலைகள் குறித்து செய்தியாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும் அதில் விழுந்து சிலர் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் அவ்வளவும் ஏற்பட்டது புகைப்பட ஆதாரத்துடன் செய்தியாக வெளியிட்டு இருந்தோம் இதை மாநகராட்சி ஆணையாளர் பார்வைக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது இதனடிப்படையில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வார்டு நேரு நகர் மெயின் ரோடு பகுதியில் அப்பகுதி அதிகாரி சேவியர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் சாலையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர் செய்தி வெளியிட்ட இரண்டே நாட்களில் சாலை சரிசெய்யப்பட்டது அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட கீழை நியூஸ் செய்தி தளத்திற்கும் மற்றும் மதுரை மாநகராட்சிக்கு நன்றியை தெரிவித்தனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்