இராஜபாளையம் தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்.

 இராஜபாளையம் தொகுதியில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் செட்டியார்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை இன்று (23.10.2021) காலை 9 மணியளவில் S.தங்கப்பாண்டியன் MLA ரவிச்சந்திரன் DRO வட்டாட்சியர் ராமச்சந்திரன் அவர்களும் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் பேசிய MLA இந்தியாவிலே அதிக மக்களுக்கு தடுப்பூசி போட்ட மாநிலம் தமிழ்நாடு தான் எனவும் தமிழக முதல்வர் மெகா தடுப்பூசி முகாம் ஏற்படுத்தி அதிக மக்களுக்கு தடுப்பூசி போட வழிவகை செய்துள்ளார் எனக் கூறினார் மேலும் தமிழக மக்களை காப்பாற்ற பெரும் முயற்சியும் ஓயாமல் உழைப்பையும் மேற்கொள்ளும் சிறந்த முதல்வர் தமிழக முதல்வர் தான் எனக் கூறினார்.இந்நிகழ்வில் செயல் அலுவலர் சந்திரகலா பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் இளைஞர் அணி மாரிமுத்து கலைவானர் சாமுவேல் சகாயம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்