மதுரை புதூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு

மதுரை,புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி, மற்றும்நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர்.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆகியோர் தலைமையில், தொழிலாளர் நலன் திறன் மேம்பட்டுத்துறை அமைச்சர் .சி.வி.கணேசன் பார்வையிட்டார்.மதுரை மாவட்டம், புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.பி.மூர்த்தி மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர்.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆகியோர் தலைமையில், தொழிலாளர் நலன் திறன் மேம்பட்டுத்துறை அமைச்சர்சி.வி.கணேசன் பார்வையிட்டார்.தொழிலாளர் நலன் திறன் மேம்பட்டுத்துறை அமைச்சர்சி.வி.கணேசன் அவர்கள் தெரிவிக்கையில்:-தமிழ்நாட்டில் 90 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, அனைத்து அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகின்றோம். தற்பொழுது வரை 30 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை ஆய்வு செய்துள்ளோம். இந்த அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கின்ற இளைஞர்களுக்கும் படித்த வேலைக்காக காத்திருக்கக் கூடிய இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கமாகவும் தமிழ்நாடு முதலமைச்சர், திட்டமாகவும் உள்ளது. அதனடிப்படையில், கடந்த 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் இந்த அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை பார்வையிடாமல் எந்தவொரு பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளாமல் இருந்த நிலையிலேயே இயங்கி வருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள 90 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் மொத்தமாக சேர்த்து 25 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பயிற்சி பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டிலேயே அதிகமான மாணவர்கள் மதுரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக அம்பத்தூர் சென்னை மற்றும் செங்கல்பட்டில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். தமிழக அரசின் நோக்கம் ஒவ்வொரு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திலும் குறைந்தபட்சம் 1000 மாணவர்களாவது படிக்க வேண்டும் என்பதாகும். இதனடிப்படையில் ஆண்டிற்கு 1 இலட்சம் மாணவர்கள் கல்வி பெற்றால், அந்த மாணவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு அரசுத்துறையிலோ அல்லது தனியார் துறையிலோ படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு முதலமைச்சர் நோக்கமாக இருக்கின்றது.2021-ஆம் ஆண்டு திறன் மேம்பாட்டுத்துறையை உருவாக்கி படித்த இளைஞர்களுக்கு மீண்டும் அவர்களுக்கு தனிப்பயிற்சி அளித்து முழுமையாக தகுதிபெறச் செய்து அரசுத்துறையிலோ அல்லது தனியார் துறையிலோ படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்ற நோக்கத்தில் அடிப்படையில்தான் ஒவ்வொரு அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகின்றோம். நேற்றைய தினம் ஆண்டிப்பட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை ஆய்வு செய்த பொழுது அங்கு அதிகமான பெண்கள் ஆர்வமுடன் டெக்ஸ்டைல்ஸ் தொடர்பான பயிற்சி பெற்று வருவதை பார்த்தோம்.

எந்தெந்த இடங்களில் எந்தெந்த பகுதிகளில் எந்த பயிற்சியை கற்றுகொள்ள முக்கியத்துவம் அதிகமாக இருக்கின்றதோ மாணவர்கள் எந்த பயிற்சியில் சேர்ந்து படிக்க ஆர்வமாக இருக்கின்றார்களோ அவற்றை புதியதாக கொண்டு வர வேண்டும். தற்காலத்திற்கு ஏற்றவாறு புதிய பயிற்சிகளை உருவாக்கி பயிற்சி அளிக்க வேண்டும். 50 , 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்களை கண்டறிந்து மீண்டும் புனரமைக்கப்பட வேண்டும். மேலும், அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி கழிப்பிட வசதி முதலானவற்றை ஆய்வு செய்து முழுமையாக திட்டம் தயாரித்து, நிதித்துறை அமைச்சர், பார்வைக்கு கொண்டு சென்று அவரின் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர், கவனத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.தமிழ்நாட்டில் உள்ள 90 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் மொத்தமாக சேர்த்து 25 ஆயிரம் மாணவர்கள் கட்டடம் கட்டும் பயிற்சி ஏ.சி.மெக்கானிக் பிளம்பிங் மற்றும் கம்யூட்டர் புரோகிராம் முதலான பயிற்சிகளை கற்பதற்கு தற்காலத்திற்கு ஏற்றமுறையில் புதிய பயிற்சி முறையினை கொண்டுவர உள்ளோம்.கடந்த 10 ஆண்டு காலமாக அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. பொறியியல் கல்லூரியில் ஒரு வருடத்திற்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் கல்வி பெற்று வருகின்றனர். அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் நிச்சயமாக 100 சதவீதம் வேலைவாய்ப்பை தமிழ்நாடு முதலமைச்சர்உருவாக்கி தருவார்கள்.புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் நடப்பாண்டில் ஆண்டு 80 சதவீதம் மாணவர்கள் வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் பயிற்சி பெறும் மாணவர்கள் வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் அதிகமான மாணவர்கள் சேர்க்கைக்கு அவர்களுக்கு எந்தெந்த தொழில் என்னென்ன பயிற்சிகள் இருக்கின்றன என்றும்இ எத்தனை வேலைவாய்ப்புகள் நிரப்படாமல் இருக்கின்றன என்றும்இ இந்த 5 ஆண்டு காலகட்டத்தில் எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் இன்றைய காலகட்டத்தில் எந்தெந்த வேலைக்கு எவ்வளவு வருமானம் என்பதை தகவல்களாக தயாரித்து மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் கொடுத்தால் அவற்றை பார்த்து அவர்கள் சிந்துத்து முடிவெடுப்பதற்கு உதவிகரமாக இருக்கும் என்று தொழிலாளர் நலன் திறன் மேம்பட்டுத்துறை அமைச்சர்சி.வி.கணேசன் தெரிவித்தார்.இந்த ஆய்வில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர்கொ.வீர ராகவ ராவ்மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மண்டல இணை இயக்குநர் (பயிற்சி)ஜெ.அமலா ரக்சலின்மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு)சந்திரன் உதவி இயக்குநர் (வேலைவாய்ப்பு)கண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்