சோழவந்தானில் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு

மதுரை அருகேசோழவந்தான் ரயில்வே மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் சுமார் ஐந்தாண்டு காலமாக நடந்து வருகிறது.இதனால், சோழவந்தானில் இருந்து வட பகுதிக்கும்,வடபகுதியில் தென்பகுதிக்கு வரக்கூடிய வாகனங்களும், நடந்து செல்பவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். வாடிப்பட்டி மற்றும் நகரி ரோடுகளில் குடி இருந்து வருபவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.இதனால், இப்பகுதியில் குடியிருப்பு மக்களும்அரசியல் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இருந்தாலும், இந்த ரயில்வே மேம்பாலம் பணி முழுமையாக நடைபெறவில்லை. இதனால், நேற்று விழாவுக்கு வருகை தந்த வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களிடம் இப்பகுதி குடியிருப்போர் சங்க தலைவர் தங்கராஜ்,நிர்வாகி முத்துவேல் உள்பட இப்பகுதியில் வசிக்கும் கூடியவர்கள் திரண்டுவந்து அமைச்சரிடம் புதிய மேம்பாலம் பணியை முடித்து கொடுக்கும்படி கோரிக்கை வைத்தனர். இதன்பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஸ் சேகர், வெங்கடேசன் எம்எல்ஏ,பேரூராட்சி உதவி இயக்குனர் சேதுராமன், மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் முன்னிலையில் அமைச்சர் மூர்த்தி ஒவ்வொரு துறையும் அழைத்து இந்த புதிய மேம்பாலம் பணி தாமதத்திற்கு காரணம் என்னவென்று கேட்டறிந்தார். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வேலையை முடித்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அப்படித் தவறினால், ஒப்பந்தகாரர் மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்தார.முன்னதாக வாடிப்பட்டி ரோட்டில் குடியிருப்பு பகுதி மக்கள் புதிய மேம்பாலம் பணி விரைவில் முடித்து கொடுக்க அமைச்சரிடம் மனு கொடுப்பதற்கு அப்பகுதி மக்கள் திரண்டு நின்று இருந்தனர். தகவலறிந்து, இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் அங்கு சென்று விழாவிற்கு வருகை தரும் அமைச்சரிடம் நேரில் வந்து நிர்வாகிகள் மட்டும் மனு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இருந்தாலும், நிர்வாகிகளுடன் அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர் .விழாவில், கலந்துகொண்ட அமைச்சரிடம் சோழவந்தான் ரயில்வே மேம்பாலம் பணி குறித்து இதனால், அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் இன்னல் குறித்து மனு கொடுத்தனர்.இதன்பேரில், அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ,பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான்பானு, எம்.வி.எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளித் தாளாளர் மருதுபாண்டியன்,பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர்,ஒன்றிய பொறுப்புக்குழுதலைவர் பசும்பொன் மாறன்,பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ராஜா என்ற பெரியகருப்பன்,கேபிள் ராஜா,சுப்ரமணி, நீலமேகம்,தனபாலன்,வீரபாண்டி, பவுன்முருகன், சிபிஆர் சரவணன்,முன்னாள் பேரூராட்சித் துணைத் தலைவர் அண்ணாதுரை,இளைஞரணி அமைப்பாளர் வெற்றிச்செல்வன், லிங்கம்,மாவட்ட பிரதிநிதி கண்ணன்,ஒன்றியபிரதிநிதி தவமணி, மகளிரணி சசிகலாதேவிசக்கரவர்த்தி,கவுதமராஜா, அருணா,சிற்றரசு,சுரேஷ்,கிளை செயலாளர் சோழராஜன், திருவேடகம் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் ஆறுமுகம்,சமூக ஆர்வலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..