நூல் விலை உயர்வால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பேண்டேஜ் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் (காஸ் பேண்டேஜ் )மருத்துவதுணி உற்பத்தி அதிக அளவில் நடைபெற்று வருகிறது.இங்கு உற்பத்தி செய்யப்படும் மருத்துவதுணி இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது .இந்த நிலையில் மத்திய அரசு நூலுக்கு போடப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி அதிகமாக உள்ளதாலும் பஞ்சுகள் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதால் நூல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அதேபோல் நூல் விலையும் அதிகரித்து உயர்ந்துள்ளதால் உற்பத்தி செய்ய முடியாமல் பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் விசைத்தறி தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் .கடந்த ஆண்டு 50 கிலோ 40 நம்பர் நூல் 9 ஆயிரத்துக்கு விற்கப்பட்டுள்ளது தற்போது 13 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது .பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் நான்கு நாட்கள் அடையாள வேலை போராட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்களுக்கு ஆதரவாக சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மத்திய மாநில அரசுகள் நூல் தட்டுப்பாடு இல்லாமலும் நூல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

செய்தியாளர் வி காளமேகம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..