பனையூர் பகுதிகளில் டெங்கு மூளை காய்சல் பரவும் அபாயம்’ சுகாதாரத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு முகாம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவில் பனையூர் .கல்லம்பல் ஊராட்சிகளில் மூளை காய்ச்சல், டெங்கு காய்சல். பரவும் அபாயம் உள்ளதை தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் தீவிர நோய் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவர் டாக்டர் சிவகுமார் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி, பனையூர் ஊராட்சி மன்ற தலைவர் அகிலா ராணி கிழியன் மற்றும் விராதனூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நர்மதா மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் செவிலியர்கள் வீடு வீடாக சென்று டெங்கு ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது . அதனை தொடர்ந்து வீடு வீடாக காய்ச்சல் மற்றும் நோய் அறிகுறிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது மேலும் ப்ளீச்சிங் பவுடர் கொசுமருந்து ஆகியவை அடித்து தீவிர சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்