அப்துல் கலாம் 90வது பிறந்தநாளை முன்னிட்டு பனை விதை நடும் நிகழ்வு :

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக இராஜசிங்கமங்கலம் அருகில் உள்ள நோக்கன்கோட்டை ஊரணி கரை ஓரங்களில் பனை விதை விதைப்பு நிகழ்வு  நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆசிரியர் பாதுஷா, மக்கள் பாதை நூருல் அமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஊரணி கரை ஓரங்களில் உள்ள நெகிழி மற்றும் குப்பைகளை தூய்மைபடுத்தும் பணி நடைபெற்றது.