காட்பாடியில் விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு ரூ12.57 லட்சம் நிதி உதவி.

வேலூர் மாவட்டம் வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் மாலதி, கடந்த சட்டமன்ற தேர்தலின்போது பறக்கும் படையில் பணிபுரிந்தபோது கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.இந்த நிலையில் இறந்த மாலதியின் 1997-ல் பயிற்சி பெற்ற 2153 காவலர்கள் ஒற்றிணைந்து காக்கும் காவலர் குழு அமைத்து அவரது குடும்பத்திற்கு௹12.57 நிதிதிரட்டினர்.அதனை காட்பாடியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துகாட்பாடி காவல் ஆய்வாளர் ஆனந்தன் , மாலதி குடும்பத்தாரிடம் வழங்கினர்.இந்த குழுவின் மூலம் இதுவரை 19 காவலர்களின் குடும்பத்திற்கு ரூ 1.73 கோடி வரை நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.