சேர்ந்தமரம் அருகே செல்போன் பணம் திருடிய நபர் கைது..

சேர்ந்தமரம் அருகே இரவில் கடையை உடைத்து பணம் மற்றும் செல்போன் திருடிய நபர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவர் பெட்டி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் இரவில் தன் கடையை உடைத்து அதிலிருந்து பணம் மற்றும் செல்போன் திருடு போனதாக சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.இந்த புகாரின் பெயரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் குமரேசன் விசாரணை மேற்கொண்டு மேற்படி கடையை உடைத்து திருட்டில் ஈடுபட்ட தன்னுத்து கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் குருசாமி (17) என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் அவரிடமிருந்து திருடப்பட்ட பணம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்