குப்பநத்தம் அணை முழு கொள்ளவு எட்டியது தொடர்ந்துசெங்கம் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருவதால் குப்பநத்தம் பகுதியில் கட்டியுள்ள குப்பநத்தம் அணை அதன் முழு கொள்ளளவான 59 அடியில் 57அடி நீர் தற்போது எட்டியுள்ள நிலையில் அணைக்கு நீர் வரத்து 100 கன அடியாக உள்ளது.எனவே அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை மூலம் உபரி நீர் 100 கண அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அணையை திறந்து வைத்தார்.இதனால் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரிகள் மற்றும் ஊராட்சிக்கு சொந்தமான சிறிய ஏரிகள் . மொத்தம் 647 ஏரிகள் விரும்பி அதனை சுற்றியுள்ள கிராமப்புற விவசாயிகள் பொதுமக்கள் பயன்பெறுவர்.மேலும் செய்யாற்று ஒட்டியுள்ள தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சியில் செங்கம் வட்டாச்சியர் சி.முனுசாமி , பொது பணி துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.