உயிா்பலி வாங்க காத்திருக்கும் டிரான்ஸ்பார்மர்கள்.அச்சத்தில் குடியிருப்புவாசிகள்.

மதுரை மாவட்டம்.உசிலம்பட்டி நகராட்சிப் பகுதிகளில் உள்ள தெருக்களில் வீடுகளுக்கு மின்சாரம் கொண்டு செல்வதற்காக பல தெருக்களின் ஓரத்தில் ஆள்நடமாட்டமில்லா பகுதிகளில் உயர்அழுத்த மின்மாற்றிகள் (11கேவி-11000வோல்ட்) அமைக்கப்பட்டுள்ளன.சமீப காலங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகள் தரையிலிருந்து 20 அடிக்கு மேலே வருமாறு வைக்கப்பட்டுள்ளன.ஆனால் கடந்த 60 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட மின்மாற்றிகள் தெருக்களில் வீடுகளின் வளர்ச்சியாலும் சாலைகள் உயரமாக போடப்பட்டதாலும் மிகவும் தாழ்வாக அமைந்து உயிர்பலி ஏற்ப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன.குறிப்பாக கீழப்புதூர் வி.எம்.தெரு வண்ணாரப்பேட்டை விநாயகர் கோவில்; தெரு ஆனந்தா நகர் 4வது தெரு பேரையூர் ரோட்டிலுள்ள நந்தவனத்தெரு ஆகிய தெருக்களில் அமைந்துள்ள மின்மாற்றிகள் தொட்டுவிடும் தூரத்தில் உள்ளன.

இதனாhல் சாதரணமாக தெருவில் நடந்து செல்வோரின் கை தொட்டு விடும் தூரத்தில் உள்ளன.மேலும் தெருக்களில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பள்ளி வாகனங்கள் மின்மாற்றியை உரசியபடி செல்வதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புண்டு.இரு சக்கர வாகனத்தில் செல்வோரும் நடந்து செல்வோரும் மின்மாற்றி அருகில் நடந்து செல்லும் போது மின்சாரம் பாய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் மெதுவாக நடந்து செல்கின்றனர்..வி.எம் தெருவில் மின்மாற்றி அருகிலுள்ள வீட்டின் சுற்றுச்சுவரில் விளையாடிக் கொண்டிருந்த பூனை மின்மாற்றியின் உயர் அழுத்த மின்சாரத்தால் ஈர்க்கப்பட்டு மின்மாற்றியின் மீது விழுந்து மின்மாற்றியில் தீப்பிடித்த சம்பவமும் அப்பகுதியில் நடந்துள்ளது.இது குறித்து மின்மாற்றிகளை மாற்றி அமைக்கக் கோரி உசிலம்பட்டி மின்வாரியத்தில் குடியிருப்புவாசிகள் பலமுறை மனு அளித்தாலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட பொழுது அரசிடம் நிதி இல்லாததால் நடவடிக்கை எடுக்க தாமதமாகின்றது எனக் கூறினர்.நகராட்சி குடியிருப்பு பகுதிகளில் தாழ்வாக உள்ள மின்மாற்றிகளால் பெரும் விபத்து ஏற்ப்பட்டு உயிர் சேதம் ஏற்படும் முன் மின்மாற்றிகளை பாதுகாப்பான பகுதிகளில் மாற்றியமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..