செங்கம் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து உருவ பொம்மை எரிப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் மற்றும் ஆதமங்கலம் புதூர் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றதுஉத்திரப்பிரதேசத்தில் விவசாயிகளின் மீது கார் ஏற்றி கொன்ற மத்திய அமைச்சர் அஜய் மிஷ்ரா மகன் போக்கை கண்டித்தும் மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குகிளை நிர்வாகிகள் தோழர் ஏழுமலை மற்றும் வேலு தலைமை தலைமையில் நடைபெற்றது.மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி,அமித்ஷா மற்றும் யோகி ஆதிதாநாத்தை உருவப்படங்கள் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்ட போது பரபரப்பு காணப்பட்டதுஆர்ப்பாட்டத்தில்தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் ஆர்.காமராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தாலுக்கா செயலாளர் பிரகாஷ் ஆட்டோ சங்கம் மாவட்ட பொருளாளர் முபாரக், தாலுக்கா தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்,இந்நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது