அல்லிந்தல் கிராமத்தில் டாக்டர் அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் முப்பெரும் விழா .

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அல்லிந்தல் கிராமத்தில் டாக்டர் அப்துல்கலாம் நற்பணி மன்றம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.அப்துல்கலாம் நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.எஸ்.தயாளன் அனைவரையும் வரவேற்று பேசினார்.அல்லியந்தல் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்மான சு. அப்பாதுரை முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஊட்டி அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் நெடுஞ்செழியன் , கிழ்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சி. கிருபானந்தன் , பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சேகர், உதவி தலைமை ஆசிரியர் சாம்ராஜ் மற்றும் அல்லிந்தல் ஊராட்சி மன்ற தலைவர் பொம்மி முருகன், காஞ்சி சுவாமி விவேகானந்தா பள்ளி நிறுவனதலைவர் ஜெயப்பிரகாஷ் , சமூக சேவகர், பத்திரிக்கையாளர் பாலூர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.இவ்விழாவில் 3500 மரக்கன்றுகள் மற்றும் 3000 பனை விதை நட்டு அடர்வனம் அமைத்தல் துவக்க விழாவும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் இனிப்புகளும் வழங்கப்பட்டது.கருத்தரங்கத்தில் டாக்டர் அப்துல்கலாம் பற்றிய எழுச்சியும் இளைஞர்களின் வளர்ச்சியே இந்தியாவின் எதிர்காலம் பற்றி விளக்கமாக கூறப்பட்டது.இந்நிகழ்ச்சியில் டாக்டர் அப்துல்கலாம் நற்பணி மன்றத்தின் செயலாளர் கார்த்திக் நன்றியுரையாற்றினார் .இந்நிகழ்ச்சியில் அப்துல்கலாம் நற்பணி மன்றத்தின் சார்பில் அலெக்ஸ் ,விக்ரம் , சுரேஷ், அசோக் , வெங்கடேஷ் , எழில்மாறன் , மற்றும் நற்பணி மன்றத்தின் உறுப்பினர்களும் நிர்வாகிகளும் பங்கேற்றனர் இந்நிகழ்ச்சியில் அல்லியந்தல் கிராம இளைஞர்கள் ஊர் பொதுமக்கள் பலர் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்