மட்டபாறையில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்..

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மட்டப்பாறை, விளாம்பட்டி பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக   அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இதனை ஏற்று நேற்று திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ . பி. செந்தில்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் சௌந்தரபாண்டியன், மாவட்ட பொறுப்பாளர் ராஜ்குமார், மட்டப்பாறை ஊராட்சி மன்றத் தலைவர் மகேந்திரன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.படவிளக்கம்: மட்டப்பாறையில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஜ.பி. செந்தில்குமார் நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்தனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா