உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்டிபிஐ கட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா..

தென்காசி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா கடையநல்லூர் எஸ்டிபிஐ கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட தலைவர் யாசர்கான் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் ஷேக் ஜிந்தா மதார், மாவட்ட செயலாளர் சிக்கந்தர், மாவட்ட பொருளாளர் செய்யது மஹ்மூத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹக்கீம், எஸ்டிடியு தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஹக்கீம், மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது, தென்காசி தொகுதி தலைவர் சினா, சேனா சர்தார், கடையநல்லூர் தொகுதி தலைவர் ஷேக் முஹம்மது ஒலி, ஆலங்குளம் தொகுதி தலைவர் பத்தி ஹாஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மண்டல தலைவர் திப்பு சுல்தான், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் லுக்மான் ஹக்கீம், மாவட்ட செயலாளர் அப்துல் பாஸித் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கேடயம் வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டு சிறப்பாக மக்கள் சேவையாற்ற வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. விழாவில் மாவட்ட, தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்