காவல்துறையின் சார்பில் இருசக்கர வாகனப் பேரணி.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல், பிறந்த நாளான அக்டோபர் 31ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக ஓவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக காவல்துறையின் சார்பாக இருச்சக்கர வாகனப் பேரணி கன்னியா குமரியிலிருந்து புறப்பட்டு, குஜராத் மாநிலம் கவேடியாவிலுள்ள “ஒற்றுமை சிலையை” சென்றடையும். பேரணி , மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டம் கப்பலூர் வழியாக வந்தடைந்தது.இப்பேரணியை, மதுரை மாவட்ட காவல் துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்வீ. பாஸ்கரன், இருசக்கர வாகன பேரணியை, வரவேற்று மேள தாளங்களுடன் உற்சாகப்படுத்தி வரவேற்றார்கள்.இந் நிகழ்ச்சியில், இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாளான அக்டோபர் 31ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக ஓவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தேசிய ஒற்றுமை தினத்தை கொண்டாடும் விதமாக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, நாட்டின் நான்கு திசைகளிலும் வடக்கே ஜம்மு காஷ்மீர், தெற்கே தமிழ்நாடு, மேற்கே குஜராத் மற்றும் கிழக்கே திரிபுரா ஆகிய மாநிலங்களிலிருந்து காவல்துறையினர் சார்பாக அம் மாநிலங்களிலிருந்து, இருசக்கர வாகன பேரணி ஆரம்பிக்கப்பட்டு, குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்திலுள்ள கவேடியாவில் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள “ஒற்றுமை சிலை” என்றழைக்கப்படும். சர்தார் வல்லபாய் பட்டேல், திருவுருவ சிலையினை சென்றடைகிறது. இந் நிகழ்வு, தேசிய ஒருங்கிணைப்பு என்பதே இப்பேரணியிள் நோக்கம் ஆகும். இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு காவல்துறை சார்பாக, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அண்ணல் மகாத்மாகாந்தி மண்டபத்திலிருந்து மணிமுத்தாறு 12வது சிறப்புக் காவல் படை துணைத் தளவாய்குமார், தலைமையில் 25 மோட்டார் சைக்கிள்களில் 25 தமிழ்நாடு காவல்துறையினரும், 16 உதவியாளர்களும் அடங்கிய குழு பேரணியாக புறப்பட்டு 2085 கி.மீ. தூரம் பயணம் மேற்கொண்டு கன்னியாகுமரி, மதுரை திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சித்ரதுர்கா, ஹப்ளி, கொல்ஹாபூர், பூனே, தானே, சூரத் மற்றும் நர்மதா மாவட்டங்கள் வழியே 10 நாட்கள் பயணித்து 24.10.2021 அன்று கவேடியாவிலுள்ள ‘ஒற்றுமை சிலையினை” சென்றடைந்து. 31.10.2021 அன்று நடைபெறும் தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டங்களில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள். மேலும், இருசக்கர வாகனப் பேரணிமதுரை மாவட்டம் கப்பலூர் வழியாக வந்த போது, மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், பேரணியை வரவேற்று அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, சிறப்புரையாற்றி இருசக்கர வாகன பேரணியை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில், இரண்டாம் சிறப்பு காவல் படை பிரிவு தளவாய்ஜெயபால், திருமங்கலம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்முத்துக்குமார் மற்றும் காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..