குப்பநத்தம் அணை நீர்வரத்து அதிகரிப்பு; வெள்ள அபாய எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பனத்தம் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணை எந்த நேரத்திலும் திறக்கப் படலாம் என்பதால், செய்யாற்றின் கரையோர மக்களுக்கு, தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகப்பெரிய சாத்தனூர் அணைக்கு அடுத்தபடியாக குப்பநத்தம் அணை விளங்கி கொண்டிருக்கிறது. ஜவ்வாதுமலை அடிவாரத்தில், அமைந்துள்ள குப்பநத்தம் அணை 60 அடி உயரத்துடன், 700 மி.கன அடி நீர் கொள்ளளவுடன் கட்டப்பட்டுள்ளது. தற்போது ஜவ்வாதுமலையில் மழை பெய்து வருவதால், அணையில், 55 அடி உயரத்துடன், 600 மி.கன அடி நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு வினாடிக்கு, 550 கன அடி வீதம் நீர்வரத்து அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால், அணையிலிருந்து எந்த நேரத்திலும் நீர் திறக்கப் படலாம் என்பதால், செய்யாற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, செங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் உத்தரவின்படி, செங்கம் மற்றும் செய்யாற்றின் கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..