வாசன் கண் மருத்துவமனை யின் புதிய கிளை அண்ணா நகரில் திறக்கப்பட்டது இதில் கண் தானம் உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது இதில் நிதியமைச்சர் கலந்து கொண்டார்.

மதுரை அண்ணாநகர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள வாசன் கண் மருத்துவமனையை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்புதிதாக திறக்கப்பட்டுள்ள வாசன் கண் மருத்துவமனை யில் 3 ஆபரேஷன் தியேட்டரில் மற்றும் கண்ணாடி ஷோரூம் மற்றும் மருந்தகம் மற்றும் பரிசோதனை கூடம் அமைத்து உள்ளனர்நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் மேலாளர் திரு குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கண்தான உறுதிமொழி எடுத்தனர் 50 பேருக்கும் நிதியமைச்சர் சான்றிதழ்களை வழங்கினார்வாசன் கண் மருத்துவமனை தலைமை டாக்டர் கேட்கமல் பாபு வரவேற்றார் மருத்துவமனை இயக்குனர் மீரா அருண் வாழ்த்திப் பேசினார் மருத்துவமனை நிர்வாக அலுவலர்கள் சுந்தரம் முருகேசன் மற்றும் பன்னீர்செல்வம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்