வேலூர் பாலாற்றில் வெள்ளம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வருவாய்துறை எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் வழியாக வரும்பாலாற்றில் வெள்ளம் வருவதால் கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கர்நாடக மாநிலத்தில் தற்போது தொடர் மழை பெய்துவருகிறது. கோலார் மாவட்டத்தில் உள்ள பேத்தமங்கலா டேம் நிரம்பி உள்ளதால் தற்போது தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.அந்த தண்ணீர் தமிழகத்தில் உள்ள பாலாற்றில் கலக்கிறது.இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாததம், பள்ளிகொண்டா, விரிஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளம் வருகிறது.ஆகவே கரையோரத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வருவாய்துறையினர் தண்டோரா மூலம் அறிவித்துவருகின்றனர்.