மதுரை காமராஜர் பல்கலைக்கழக பணியாளர்கள் போராட்டத்தின்போது பெண் ஊழியர் மயங்கி விழுந்தார்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று நாட்களாக பணி நிரந்தரம் செய்யக்கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் கதிரவன் வந்துதொகுப்பூதிய பணியாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் அப்போதுபோராட்டத்தில் கலந்து கொண்ட பத்ம ராணி என்ற பெண் மயங்கி விழுந்தார்உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பத்மா ராணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்
இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்