காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராம தலைவராக ராதாகிருஷ்ணன் 666-வாக்குவித்தியாசத்தில் வெற்றி

வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 41 கிராம பஞ்சாயத்துக்கள் ஒரு பஞ்சாயத்து அம்முண்டியை தவிர்த்து 40 கிராம பஞ்சாயத்துக்கு கடந்த 6-ம் தேதி வாக்குபதிவு நடந்து நேற்று 12-ம் தேதி காட்பாடியில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடந்தது.காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராம பஞ்சாயத்துக்கு திமுக சார்பில் ராதாகிருஷ்ணன், குணவேலன் இடையே கடும் போட்டி இருந்தது. இதில் ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார். அவர் பெற்ற வாக்குகள் 3224, குணவேலன் பெற்ற வாக்கு 2558 ஆகும். 666 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ராதாகிருஷ்ணன் பஞ்சாயத்து தலைவரானார். வெற்றிபெற்ற ராதாகிருஷ்ணன் காட்பாடி காந்திநகர் வீட்டில் இருந்த நீர் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றார்