உசிலம்பட்டி அருகே 20 வருட ஆக்கிரமிப்பை அகற்றிய ஊராட்சி மன்ற தலைவர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாமரத்துப்பட்டி காலணித் தெருக்களில் உள்ள வடிகால் சாக்கடை கால்வாய்கள் இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்பு செய்து சாக்கடை நீர் ஆங்காங்கே தேங்கி தொற்றுநோய் பரவுவதாக பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.இந்நிலையில் இதுகுறித்து சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவரிடம் அஜித்பாண்டியிடம் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்ற ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டியன் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பில் இருந்த இடத்தை அகற்றி வடிகால் வாய்க்கால் சரி செய்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

மேலும் இருபது வருடங்களாக எந்த ஒரு அதிகாரியிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு கொடுத்ததும் உடனடியாக வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களின் நலன் கருதி சாக்கடை வடிகால் கால்வாயை தூர்வாரி கொடுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..