சவூதியில் உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு SDPI கட்சியினர் நேரில் சென்று ஆறுதல்

இராமநாதபுரம்(கிழக்கு) மாவட்டம் திருவாடானை தாலுகா முள்ளிமுனை கிராமத்தில் கலைநிவேதிகா அவர்களின் கணவர் ராமர் சவுதியில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார், கடந்த மாதம் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற போது அவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார், இதனையடுத்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நேற்று எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் நஜ்முதீன் அவரிடத்தில் இறந்தவரின் உடலை பெற்றுத்தருமாறு மனு அளித்தனர், மனுவை பெற்றுக்கொண்ட நிர்வாகிகள் உடனடியாக ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர்.அதை தொடர்ந்து இன்று திருவாடானை வடக்கு தொகுதி தலைவர் சலாமத் அலி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான், தொகுதி பொருளாலர் அப்துல் மஜீத், மாவட்ட சமூக ஊடக அணி செயலாளர் முஜாஹிதீன்,நம்புதாளை நகர் செயலாளர் கலபத்த சகுபர் சாதிக், தொண்டி நகர் செயலாளர் ரிஸ்வான் ஆகியோர் நேரில் அந்த குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.சவுதியில் ISF ( Indian Social Forum ) தொடர்பு கொண்டு அவர் உடலை ஊருக்கு கொண்டு வருவதற்குண்டான முயற்சியையும் நாங்கள் செய்வோம் என்று மீண்டும் வாக்குறுதி கொடுத்து உள்ளனர்.