செல்போன் டவரில் பேட்டரி திருடிய வாலிபர் கைது….

மதுரை தென்பரங்குன்றம் சிலோன் காலனியை சேர்ந்தவர் ராஜாமணி 63 .இவர் தனியார் நிறுவன செல்போன் கம்பெனியில் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். இவரது நிறுவனத்தின் செல்போன்டவர்பெத்தானியாபுரம் பாஸ்டின் நகர் முதல் தெருவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொறுத்தப்பட்டிருந்த 24 பேட்டரிகள் ரூபாய் ஓரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ளவை திருடு போய்விட்டன. இந்த திருட்டு தொடர்பாக ராஜாமணி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பசும்பொன் நகர் ஜீவா தெருவைச் சேர்ந்த ராஜீவ் காந்தி 35 என்ற வாலிபரை கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்