மதுரையில் ரோட்டுக்கு கேட்டு போட்டு அட்டகாசம் செய்யும் நகைக்கடை அதிபர்..!!

மதுரை மாவட்டம் விரகனூர் பாலாஜி நகரை சேர்ந்த ரவிக்குமார்,இவர் அதே பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறார்,இந்த நிலையில் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விரகனூர் பகுதியில் வீடு கட்டிய குடியேறிய நிலையில்,அதன் எதிரே இருக்கக்கூடிய இடத்தையும் அவரை வாங்கியுள்ளார்,இந்த நிலையில் இரண்டு இடைப்பட்ட பகுதியில் அரசுக்காக கொடுக்கப்பட்ட சாலையை எனக்குத்தான் சொந்தம் எனக்கூறி 10 அடி உயரத்திற்கு இரும்பாலான கேட் அமைத்து அரசு சொந்தமான பொது சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்,இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளித்த நிலையில் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுத்து பதில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்,உத்தரவு வந்து ஒரு மாத காலம் ஆகியும் தற்போது வரை அதிகாரிகள் நகைக்கடை அதிகாரியுடன் கூட்டு சேர்ந்துகொண்டு பொதுப் பாதையை மறைத்து அமைக்கப்பட்டுள்ள கேட்டை அகற்றாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ள நபருக்கு துணைபோவதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்