மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை உடனே நிறைவேற்றித்தரும் அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது-அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 60 மாற்றுத்திறனாளிகளுக்கு தமது சொந்த நிதியில் சக்கர நாற்காலி ,மேலூரை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கு ஆண்ட்ராய்ட் மொபைல் போன்,அலங்காநல்லூரை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு மடிக்கணினி ஆகியவற்றை வழங்கும் நிகழ்வில் தமது குடும்பத்தினர் உடன் கலந்து கொண்ட நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை உடனே நிறைவேற்றித்தரும் அரசாக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு திகழ்கிறது.

கடந்த வாரம் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து கொரோனா பாதிப்பால் தாய் தந்தையை இழந்தவர்களுக்கு நிவாரணம் அளித்திடும் நிகழ்வில் இந்த இரண்டு மாணவிகளை சந்தித்தேன் அப்போது அவர்களிடம் அளித்த உறுதியின் படி பள்ளி மாணவிகள் இருவருக்கு லேப்டாப் மற்றும் மொபைல் போன் வழங்கி உள்ளேன் . அதேபோல் தேர்தல் காலம் முடிவு பெற்றதில் இருந்தே திட்டம். தீட்டி எனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் 60 நபர்களுக்கு சக்கர நாற்காலி தரும் நிகழ்வு தற்போது சிறப்பாக நடைபெற்றுள்ளது.இதற்கான ஏற்பாடுகள் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்