Home செய்திகள் வேலூர் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பணமழையில் வாக்காளர்கள் வேட்பாளர்கள் தாராளம்.

வேலூர் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பணமழையில் வாக்காளர்கள் வேட்பாளர்கள் தாராளம்.

by mohan

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6,9 தேதிகளில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்தது. அதன் முடிவு நாளை 12-ம் தேதி வர உள்ளது.இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் பணமழையில் நனைந்தனர்.உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், கிராம் வார்டு கவுன்சிலர் என்று தேர்தல் நடந்தது.பொதுவாக பணத்தை அரசியல்வாதிகள் முதலீடு செய்து பிறகு அளவில்லாமல் பணத்தை கொள்ளை அடிப்பார்கள்.அப்படி நடந்ததுதான் இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்.திமுகவை பொறுத்தவரை மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதில் கில்லாடிகள்.ஆளுங்கட்சி திமுக இருப்பதால் ஊரக உள்ளாட்சி பதவிகள் அனைத்தையும் கைப்பற்ற வேண்டும் என்று திமுக தலைமைக்கழகம் முடிவு செய்து உள்ளது.அதன்படி எவ்வளவு செலவானாலும் சரி ஒரு கை பார்த்துவிட முடியுசெய்து வாக்காளர்களுக்கு பணத்தையும், பரிசு பொருள்களையும் வாரி இறைத்து உள்ளனர்.மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிடும் திமுகவினர் ஓட்டு ஒன்றுக்கு ரூ 250 வரையும் கொடுத்தனர்.அதிமுக வேட்பாளர்கள் இதனால் திணறினார்கள் ஒருசில வேட்பாளர்கள் மட்டும் பணம் கொடுத்தனர். ஆனால் திமுகவினர் வாரி வழங்கினர்.பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளர்களும், கிராம வார்டு கவுன்சிலருக்கு போட்டிபோட்டவர்கள்தான் வாக்காளர்களை ரூ 500 மற்றும் ரூ1000 என்றும் வாக்காளர்களுக்கு கொடுத்தனர். பரிசு பொருள்களும் கொடுத்தனர். தலைவர் வேட்பாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் தங்கள் ஓட்டுவாங்க வீடு ஒன்றுக்கு தலா ஒரு அரிசி மூட்டையை பரிசாக கொடுத்தனர்.2 அல்லது 3 வேட்பாளர்களுக்கு தலா ஒரு வாக்கை வாக்காளர்கள் அளித்தனர்.இப்படியாக களைகட்டிய தேர்தல் திருவிழாவின் வெற்றி நாளை 12-ம் தேதி வர உள்ளது.ஆகவேட்பாளர்கள் வாரி வழங்கி பணம், பரிசு பொருள்களால் திக்கு முக்கு யாடினர் வாக்காளர்கள், வாழ்க ஜனநாயக தேர்தல்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!