தேவர் குருபூஜைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அக்.30ல் பசும்பொன் முத்துராமலிஙகத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவிற்கு தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனை நீக்க கோரி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் (பசும்பொன் பிரிவு) கட்சி சார்பில் தேனி ரோட்டிலுள்ள முருகன் அருகில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கட்சி மாநில பொதுச்செயலாளர் மகேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்த்தில் தேவர் ஜெயந்திக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்க கோரி கோஷங்கள் எழுப்பட்டன.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் உள்பட சுமார் 200க்கும் மேற்ப்பட்டோர் கலநது கொண்டனர்.

உசிலை சிந்தனியா