நிலக்கோட்டை அருகே உயிருக்கு பாதுகாப்பு கேட்டு கிராம மக்கள் முற்றுகை.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா,விராலிப்பட்டி ஊராட்சியில் உள்ள சாமியார் மூப்பனூர் கிராமத்தில் 160 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள பொது மக்கள் பெரும்பாலும் கூலி வேலை மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கிராம மக்களிடையே நிலத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதில் 20 குடும்பங்களை தனியாக பிரித்து அதி பெரும்பான்மையாக உள்ள மக்கள் செல்லாயி அம்மன் திருவிழா இன்று 12.10.2021 திருவிழா நடத்த இருப்பதாக கூறி, எங்கள் 20 குடும்பத்தை பிரித்து வைத்து விட்டு எங்கள் 20 குடும்பத்தில் உள்ள ஆண்கள் மட்டும் வெளியூரிலிருந்து ஆட்களை இறக்கி கொலை செய்யும் திட்டமிட்டு இருப்பதாக கூறி நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். அவரைத் தொடர்ந்து நிலக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சென்று அங்கிருந்த போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாரனிடம் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தீ குளிப்போம் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தக்க நடவடிக்கையும் , உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று நிலக்கோட்டை துணை சூப்பிரண்டு சுகுமாரன் தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஒரு கிராமத்தில் கிராம மக்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு வந்த சம்பவம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா