Home செய்திகள் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் சான்றிதழ் வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை…

மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் சான்றிதழ் வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை…

by mohan

மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் சான்றிதழ் வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை…மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் செனாய்நகரில் உள்ள சேவாலயம் விடுதி மாணவர்களுடன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கலந்துரையாடல் நடத்தப்பட்டது.சிறப்பு விருந்தினராக அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் ஸ்டீபன் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் மாணவர்களின் தனிப்பட்ட முன்னேற்றம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மேலும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பல்வேறு மரங்களின் பயன்கள் குறித்த தங்களுக்கு தெரிந்த விபரங்களை உற்சாகமாக பேசிய மாணவர்களுக்கு அறக்கட்டளையின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அறக்கட்டளையின் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் பேசுகையில்: மாணவர் ஒவ்வொருவரும் தமது வாழ்நாளில் குறைந்தது ஆண்டுக்கு ஒரு மரமாவது நட வேண்டும், இயற்கைக்கும் மனிதர்களுக்கும் பயன்பட்டு வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்ச்சியில் ஹைக்கூ கவிஞர் ரவி, சிம்மக்கல் முதியோர் இல்ல மேலாளர் கிரேசியஸ், கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு நிறுவனர் செந்தில்குமார், மாற்றம் தேடி பாலமுருகன், திருவள்ளுவர் படிப்பகம் கண்ணன், மக்கள் தொண்டன் அசோக்குமார், சமூக ஆர்வலர் பெரியதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்று மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.இயற்கை ஆர்வலர்கள் அனைவருக்கும் வழிகாட்டி மணிகண்டன் மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.நிகழ்ச்சியின் நிறைவில் சேவாலயம் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.சேவாலயம் மாணவர் விடுதி காப்பாளர் கார்த்திகேசன் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டனுக்கும் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!