உசிலம்பட்டி அருகே நல்ல விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் மரத்திலேயே அழுகும் பப்பாளி.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வலையபட்டி ரெங்கசாமிபட்டி அம்முமுத்தன்பட்டி எருமார்பட்டி ஆகிய பகுதிகளில் 100க்கணக்கான ஏக்கரில் பப்பாளி சாகுபடி செய்துள்ளனர்.பொதுவாக பப்பாளி செடி வளர்ந்து மரமானவனுடன் 2வருடங்களில் காய்கள் காய்க்கின்றன. வருடத்திற்கு 3 முறை காய்க்கும் பாப்பாளி ஆவணி புரட்டாசி மாதங்களில் பழம் பழுக்க ஆரம்பிக்கும்.இதனை விவசாயிகள் பறித்து சந்தைகளில் விற்பனை செய்வர்.கடந்த வருடம் உசிலம்பட்டி சந்தையில் கிலோ ரூ30க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டன.இவை வெளிமார்க்கெட்டில் ரூ 60வரை விற்பனை செய்யப்படும்.மேலும் வெளி மாநிலங்களுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.ஆனால் தற்போது நல்ல விளைச்சல் இருந்தும் வெளிமாநில ஏற்றுமதி இல்லாததால் உள்ளுரில் விலை போகாததாலும் பப்பாளி விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உசிலம்பட்டி சந்தையில் பப்பாளி விலை இல்லாததால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வியாபாரிகள் தயங்குகின்றனர்.இதனால் கிலோ 1 ரூபாய்க்கு கூட வாங்க ஆளில்லை.பப்பாளியை பறித்து அதனை மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லும் செலவுக்கு கூட கட்டாததால் பப்பாளியை பறிக்காமல் மரத்திலேயே விட்டு விடுகின்றனர்.இதனால் பப்பாளி மரத்திலேயே அழுகி விழும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.அரசு இது குறித்து கவனத்தில் எடுத்து பப்பாளி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா