நிலக்கோட்டை பகுதி ஓட்டல்களில் உபரி உணவுகளை அனாதை இல்லங்களுக்கு வழங்க ஏற்பாடு அதிகாரி ஆய்வு.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள பெரிய விடுதி,ஓட்டல், தனியார் விழாக்களில் உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சென்று உபரியை உணவுகளை ஒன்றாக சேகரித்து நிலக்கோட்டை பகுதிகளில் உள்ள அனாதை இல்லங்களில் உள்ள முதியோர்களுக்கு லீஜியோ மரியே கல்வி சேவை அமைப்பின் நிறுவனர் ஸ்டெல்லா தலைமையில புனித ஜோசப் ஆதரவற்ற அனாதைகள் கருணை இல்லத்தில் இருக்கும் முதியோர்களுக்கு 168 பேருக்கு ஒருவேளை உணவு வழங்கப்பட்டது. இதனை நிலக்கோட்டை தாலுகா உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரமேஷ் முதியோர்களுக்கு சரியான உணவு வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார். அப்போது உபரி உணவை சேகரித்து பயனுள்ள வகையில் முதியோர்களுக்கு வழங்கிய அனைவரையும் ஊக்கப்படுத்தும் விதமாக அதிகாரிகள் பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா