மின்மோட்டார் விற்பனை கடையில் பெயர் பலகையில் தீ விபத்து .

மதுரை மேலமாசி வீதியில் செயல்பட்டுவரும் மாடன் எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது இது நேற்று மாலை பலத்த காற்று வீசியது அப்பொழுது கடையின் மீது வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகைகள் காற்றின் வேகம் தாங்க முடியாமல் கடையில் உயர் அழுத்த மின் கம்பியில் பெயர் பலகை அறுந்து விழுந்தது இதனால் தீப்பற்றி எரியத் தொடங்கியது தீ எரிவதை இதை கவனித்த கடை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு கடையில் இருந்த தீ அணைப்பான் தீ அணைத்தனர்.. எனினும் கடை ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்தை ஆய்வு செய்த நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மின்சார இணைப்பை துண்டிக்க செய்து மின் வயரில் சிக்கியிருந்த பெயர்ப்பலகை அகற்றி மேலும் ஏதேனும் தீப்பொறிகள் இருந்ததா என ஆய்வு செய்து தீ இல்லை என உறுதி செய்த பின்னர் புறப்பட்டு சென்றனர் பரபரப்பாய் காணப்படும் மேலமாசிவீதி பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்