Home செய்திகள் மதுரை மாவட்டத்தில் 93 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள்- ஆட்சியர் தகவல்.

மதுரை மாவட்டத்தில் 93 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள்- ஆட்சியர் தகவல்.

by mohan

மதுரையில் ஒன்றரை ஆண்டிற்கு பிறகு விவசாயிகள் மாதாந்திர குறை தீர்ப்பு கூட்டம் நேரடியாக நடைபெறுகிறது, கொரோனோ தொற்று பரவல் காரணமாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் பல்வேறு கூட்டங்கள் நடைபெறவில்லை, 2020 மார்ச் மாதம் முதல் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்படவில்லை, கடந்த 8 மாதங்களாக இணைய வழியில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன,இந்நிலையில் ஒன்றரை ஆண்டிற்கு பின் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நேரடியாக நடைபெற்றதுமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில் “மதுரை மாவட்டத்தில் தற்போது 7 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகிறது, ஒரு வாரத்திற்க்குள் மதுரை மாவட்டத்தில் கூடுதலாக 16 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும், விவசாயிகளின் வசதிக்காக மேலும் 70 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் விவசாயகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய முன் பதிவு செய்யப்படுகிறது, TNCSC இணையத்தில் விவசாயிகள் முன் பதிவு செய்ய வேண்டும், இணையத்தில் பதிவு செய்ய முடியாத விவசாயிகள் நேரடியாக சென்று முன் பதிவு செய்யலாம், நெல் கொள்முதலில் இடைத்தரகர்கள் தவிர்க்கும் விதமாக முன் பதிவு செய்யப்படுகிறது, எதிர் வரும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டங்களில் விவசாயிகளின் பொதுவான குறைகள் மட்டுமே விவாதிக்கப்படும், விவசாயிகளின் தனிப்பட்ட குறைகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுத்துப்பூர்வமாக அளிக்கப்படும், விவசாயிகளின் பொதுவான குறைகளை விவாதித்து தீர்வு காணவே இந்த முறை கடைபிடிக்கப்படும், நெல் கொள்முதலை கண்காணிக்க கோட்டாச்சியர்கள், வட்டாச்சியர்களை கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது, நெல் கொள்முதலில் எந்தவொரு குறைகளையும் வராது, விவசாயிகள் நம்பிகையுடன் காத்திருக்க வேண்டும்” என கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!