Home செய்திகள் மேலூர் அருகே, 62 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சேர்ந்து, பெண் குழந்தைகளை தெய்வமாக வழிபடும் பாரம்பரிய திருவிழா.

மேலூர் அருகே, 62 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சேர்ந்து, பெண் குழந்தைகளை தெய்வமாக வழிபடும் பாரம்பரிய திருவிழா.

by mohan

 மதுரை மாவட்டம் மேலூர் அருகே, வெள்ளலூர், உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, அம்பலகாரன்பட்டி, மலம்பட்டி உள்ளிட்ட 5 மாகாணங்களை உள்ளடக்கிய 62 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்களது பாரம்பரிய முறைப்படி பெண் குழந்தைகளை தெய்வமாக வழிபடுவது, தொன்றுதொட்டு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.இதற்காக 5 மாகணங்களை உள்ளடக்கிய 62 கிராமத்தைச் சேர்ந்த 11 கரைகளை சேர்ந்த, பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அம்மன் போல அலங்காரம் செய்து வெள்ளலூரில் உள்ள ஏழை காத்த அம்மன் கோவில் வீட்டில் அழைத்து வந்து கிராம நாட்டார்கள் முன்னிலையில் கோவில் பூசாரி, அம்மனாக வழிபாடு செய்வதற்கு 7 குழந்தைகளை தேர்ந்தெடுப்பார்.இதனைத் தொடர்ந்து 15 நாட்கள், இந்த 62 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கட்டட வேலை செய்தல், பள்ளம் தோண்டுதல், பச்சை மரம், வெட்டுதல், அசைவம் உண்ணுதல், எண்ணெய் பலகாரம் செய்தல் போன்ற எந்த காரியமும் செய்யாமல் கடுமையாக விரதம் மேற்கொள்வார்கள், அதே போல் இக்கிராமத்தைத் சேர்ந்தவர்கள், வெளிமாநிலம், வெளிநாடு உள்ளிட்டவற்றில் இருந்தாலும் இந்த விரதத்தை கடைபிடிப்பார்கள் என்பது குறிப்பிடதக்கது..இந்நிலையில், அம்மனாக தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள், கோவில் வீட்டில் இருந்து, 15 நாட்களும் ஒவ்வொரு கிராமமாக சென்று பொது மக்களுக்கு ஆசி வழங்குவார்கள். அப்போது, கிராமமக்கள் குழந்தைகளுக்கு தங்களிடம் உள்ள பழம், ரொட்டி, வளையல், உள்ளிட்ட ஏராளமான பொருட்களை வழங்குவார்கள். இதனைத்தொடர்ந்து 15ம் நாள் தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் விழாவில் முதல் நாளில், வெள்ளலூர் கோவில் வீட்டில் இருந்து 7 குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான பெண்கள் மது கலயம் எடுத்தும், ஆண்கள் மற்றும் நேர்த்திக்கடன் உள்ளோர் உடலில் வைக்கோலை பிரியாக சுற்றி, விதவிதமான முகமூடி அணிந்துக் கொண்டு 10 கிலோ மீட்டர் தொலைவுள்ள, ஏழைகாத்த அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும் அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று சாமி தரிசனம் செய்வார்கள், அதனைத் தொடர்ந்து 2ம் நாள் விழாவாக தேரோட்டமும், 3ம் நாள் விழாவாக மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுவது வழக்கம்,இந்நிலையில், தற்போது கோரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு திருவிழா பழமை மாறாமல் பாரம்பரிய முறைப்படியும், அதேநேரத்தில் கோரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு எளிய முறையில் கொண்டாடப்படுவது என கிராம மக்களின் முன்னிலையில் முடிவெடுக்கப்பட்டது, இதையடுத்து கடந்த 14ம் தேதி 7 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விழா தொடங்கிய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மதுகலயம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் எளிய முறையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாளை தேரோட்டத்தையொட்டி கோவிலில் வழிபாடு நிகழ்ச்சியும், நாளை மறுநாள் மஞ்சள்நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவுபெற உள்ளது.பெண் குழந்தைகளுக்கு எதிராக நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதே பெண் குழந்தைகளை இப்பகுதியைச் சேர்ந்த 62 கிராம மக்கள், தெய்வமாக நினைத்து பாரம்பரிய முறைப்படி தெய்வமாக வழிபாடு நடத்துவது போற்றதலுக்கு உரியது ….

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!