1970 ஆம் ஆண்டில் படித்து முடித்த தியாகராசர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்தனர்.

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகாவில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரி யான தியாகராசர் பொறியியல் கல்லூரியில் 1970 ஆம் ஆண்டில் படித்து முடித்த முன்னாள் மாணவர்கள் ஐம்பது ஆண்டுகள் கழித்து இன்று கல்லூரியில் மீண்டும் ஒன்றுகூடி ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது கடந்தகால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் ஏறத்தாள நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அவர்களில் 20க்கும் மேற்பட்டோர் நேரிலும் பிறர் ஆன்லைன் மூலமாகவும் விழாவில் கலந்து கொண்டனர்.இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு முன்னாள் மாணவர்கள் அனைவரும் தங்களால் இயன்ற தொகையை திரட்டி கல்லூரியின் வளர்ச்சி நிவாரண நிதியாக வழங்கினர் மேலும் எதிர்காலத்தில் கல்லூரிக்கு எந்த ஒரு உதவி என்றாலும் தாங்கள் முன்வந்து செய்வதாகவும் உறுதியளித்து , தங்களது கல்லூரி கால நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்திருந்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal