காட்பாடியில் உள்ளாட்சி தேர்தலில்திமுக தில்லுமுல்லு அதிமுகவை சேர்ந்த 3 பேர் கைது.

வேலூர் மாவட்டத்தில் வரும் 6-ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் வரக்கு பதிவு நடைபெற உள்ளது.காட்பாடி ஊராட்சி ஒன்றியம் 8-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் அம்பிகா, மாற்று வேட்பாளராக ரேவதி மனு செய்து இருந்தனர்.மனுக்களை வாபஸ் பெற வேண்டிய கடைசி நாளில் திமுகவின் தூண்டுதல் பேரில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அதிமுக வேட்பாளர்கள் வாபஸ் பெற உள்ளடி வேலையில் ஈடுப்பட்டனர்.திமுக மாவட்ட செயலாளர் நந்தகுமார் காட்பாடி ஊராட்சி அலுவலகம் வந்து திமுக வேட்பாளர் கவிதாவை வெற்றிபெற்ற வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்று அதிகாரிகளை கட்டாயப்படுத்தினார்.தகவல் அறிந்த அதிமுக மாநகர செயலாளர் எஸ்ஆர்கே அப்பு தன்னுடைய கட்சி நிர்வாகிகளுடன் வந்து திமுகவினர் அதிகாரிகளின் ஆதரவுடன் அதிமுக வேட்பாளர்களை மிரட்டி மனுவை வாபஸ் பெற வைத்ததாக புகார் தெரிவித்தார். இதனால் அதிமுக, திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இது குறித்து அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பபட்டது.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மோகன் புகாரின்பேரில் அதிமுக பகுதி செயலாளர் ஜனார்த்தனன், ஜெ.பேரவை செயலாளர் அமர்நாத், முன்னாள் செயலாளர் ஆனந்தன் ஆகிய 3 பேரை காட்பாடி காவல்துறையினர் கைது செய்தனர்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal