Home செய்திகள் வரி கணக்காளர்களுக்க நலவாரியம் ஏற்படுத்தி தரவேண்டும், தமிழகம், சங்கத்தின் சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம்

வரி கணக்காளர்களுக்க நலவாரியம் ஏற்படுத்தி தரவேண்டும், தமிழகம், சங்கத்தின் சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம்

by mohan

வரி கணக்காளர்களுக்க நலவாரியம் ஏற்படுத்தி தரவேண்டும்,ஜிஎஸ்டி போர்ட்டலில் இருக்கும் குளறுபடிகளை ஒன்றிய அரசு மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் சரிசெய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மதுரையில் நடைபெற்ற ITGST PA தமிழகம், சங்கத்தின் சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ITGST PA தமிழகம் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று மதுரை ஜே டி ஆர் மஹாலில் நடைபெற்றது.கூட்டத்தில் சங்க தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை வகிக்க, நிர்வாகிகள் முருகேசன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பூரண வேலு வரவேற்புரை வழங்கிட சங்கச் செயலாளர் சத்யராஜ் தீர்மான நகலை வாசித்தார்.இதில் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் நபர்கள் வரி கணக்காளர்கள் பயிற்சியாளர்கள் மற்றும் ஜிஎஸ்டிபி பட்டம் பெற்றவர்கள் உள்ளனர் இவர்கள் அனைவரும் நிச்சயமற்ற தொழில்கள் பார்த்து வருகிறார்கள் சமூகத்தில் இவர்களுக்கு என எந்த அடையாளமும் இல்லாமல் வணிகர்களின் தொழில் முன்னேற்றத்திற்கு இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருந்தாலும் கணக்காளர்களின் நிச்சயமற்ற இந்த தொழிலுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் வாக்காளர்களுக்கு நலவாரியம் ஏற்படுத்தி தரவேண்டும்.ஜிஎஸ்டி போர்ட்டலில் இருக்கும் குளறுபடிகளை சரிசெய்ய ஒன்றிய அரசு மற்றும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு வேண்டுகோள்,வருமான வரியில் இன்போசிஸ் ஏற்படக்கூடிய கோளாறுகளை விரைந்து சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். நிர்வாகி விஜய் நன்றியுரை வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!