Home செய்திகள் தென்காசியில் அஸ்ஸாம் காவல் துறையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்..

தென்காசியில் அஸ்ஸாம் காவல் துறையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்..

by mohan

அஸ்ஸாம் மாநில காவல்துறையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தேசம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் தென்காசி, புளியங்குடி பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் எஸ்டிபிஐ கட்சியினர் அஸ்ஸாம் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க ஆளும் அஸ்ஸாம் மாநிலம் தரங் மாவட்டம் தால்பூர் பகுதியில் வங்கதேசத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள், சுமார் 2,800 ஏக்கர் நிலத்தில் குடியிருப்புகள் அமைத்திருந்தனர். அந்த குடியிருப்புகளை அகற்றி நிலங்களை மீட்க மக்களை விரட்டியடிக்கும் பணியில் போலிஸார் ஈடுபட்டனர்.அப்போது துப்பாக்கிச்சூடு சம்பவமும் அரங்கேறியது. இதில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்தனர். இந்நிலையில் போலிஸாரை நோக்கி குச்சியுடன் வந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டதுடன், சுருண்டு விழுந்த அவரை லத்தியால் கடுமையாக தாக்குவதும்,அங்கிருந்த போட்டோகிராபர் அவர் மீது ஏறி மிதிக்கும் காட்சியும் அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய அஸ்ஸாம் காவல் துறையை கண்டித்து தென்காசி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் 25-09-2021 வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் கொடிமரத்திடலில் நடந்தது. இதற்கு நகர தலைவர் செய்யது அலி பாதுஷா தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் தென்காசி மாவட்ட செயலாளர் M.அப்துல் பாஸித் மற்றும் SDPI கட்சியின் தென்காசி மாவட்ட பொருளாளர் செய்யது முஹம்மது ஆகியோர் கண்டன உரையாற்றினர். SDPI கட்சியின் தென்காசி தொகுதி தலைவர் சீனா சேனா சர்தார் மற்றும் தென்காசி SDPI கட்சியின் நகர தலைவர் பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீதிக்கான இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலோனோர் கலந்து கொண்டு அநீதிக்கெதிராக குரல் கொடுத்தனர்.அதே போன்று தென்காசி மாவட்டம் புளியங்குடி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் எம்ஜிஆர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் செயலாளர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். நகரத் தலைவர் அபுசாலிஹ் மற்றும் புளியங்குடி நகர எஸ்டிபிஐ நகரத் தலைவர் தமீம் அன்சாரி ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலாளர் இம்ரான் கான் மற்றும் வாசுதேவநல்லூர் தொகுதித் துணைத் தலைவர் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலோனோர் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், மாநில அரசே வன்முறையை தூண்டிவிட்டுள்ளதாக சாடியுள்ளார். மேலும் அசாம் மாநில சகோதர, சகோதரிகளுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும், எந்த ஒரு குழந்தைக்கும் இதுபோன்ற சூழல் ஏற்படக் கூடாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!