மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நேரிடையாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்ஆட்சியர் அறிவிப்பு.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் வரும் செப்டம்பர் 28 ம் தேதி நேரிடையாக நடைபெற உள்ளதாக மதுரை ஆட்சியர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார். விவசாயிகள் தங்களது கோரிக்கையை மனுக்களாக ஆட்சியரிடம் நேரடியாக அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் முகக்கவசம், தனிமனித இடைவெளியோடு கூட்டத்தில் பங்கேற்க அறிவுறுத்தல். கொரானா காரணமாக கடந்த பல மாதங்களாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொளியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்