கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் கேஸ் மானியத்தை ரத்து செய்ததை கண்டித்து இராமநாதபுரத்தில் SDPI கட்சி ஆர்ப்பாட்டம்..

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் கேஸ் மானியத்தை ரத்து செய்ததை கண்டித்தும் எஸ்டிபிஐ கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் நூதன முறையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசு நாளுக்கு நாள் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி சாமானிய மக்கள் சிலிண்டரை பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது. இதனை கண்டிக்கும் விதமாக இராமநாதபுரத்தில் மாவட்டத் தலைவர் ரியாஸ் கான் தலைமையில் சந்தைத் திடலில் இன்று(20/9/2021) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் நஜிமுதீன் வரவேற்புரையாற்றினார், மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமை உரையாற்றினார், மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் கண்டன உரையாற்றினார், மேலும் ஆர்ப்பாட்டத்தில் தொகுதி தலைவர் பீர் முகைதீன் கண்டன கோஷம் எழுப்பினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் விறகு அடுப்பு வைத்தும், கேஸ் சிலிண்டருக்கு தூக்கு மாட்டி நூதன முறையில் கண்டனத்தை வெளிப்படுத்தினர். மேலும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் செயல்வீரர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..