Home செய்திகள் மதுரை மாநகராட்சியில் முறைகேடாக பதவி உயர்வு பெற்றவர் சட்ட அலுவலராக செயல்பட தடை விதிக்க கோரி வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மதுரை மாநகராட்சியில் முறைகேடாக பதவி உயர்வு பெற்றவர் சட்ட அலுவலராக செயல்பட தடை விதிக்க கோரி வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

by mohan

மதுரை மாநகராட்சியில் முறைகேடாக பதவி உயர்வு பெற்ற சிவபாக்கியம் என்பவர் சட்ட அலுவலராக செயல்பட தடை விதிக்க கோரி வழக்கு விசாரணையின் போது, வழக்கிற்கு தேவையான மேலும் சில ஆவணங்கள் மற்றும் உத்தரவுகளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை, பழங்காநத்தத்தைச் சேர்ந்த ஹாஜி முகம்மது இஸ்மாயில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாநகராட்சியில் நான் பில் கலெக்டராக கடந்த 1978ல் பணியில் சேர்ந்தேன். பின்னர் பதவி உயர்வுக்கான துறைரீதியான தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனால், கடந்த 2010ல் உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. கடந்த 2013ல் ஓய்வு பெற்றேன்.இந்நிலையில் 1992ல் சிவபாக்கியம் என்பவர் மதுரை மாநகராட்சியில் கருணை அடிப்படையில் ஆயாவாக நியமிக்கப்பட்டார். டைப்பிஸ்ட், உதவியாளர் மற்றும் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று கடந்த 2015ல் சட்ட அலுவலகராக நியமிக்கப்பட்டார். இதற்கு முறையான தடையின்மை சான்று பெறவில்லை. இவர், பெங்களூருவில் உள்ள சட்டக் கல்லூரியில் எல்எல்பி முடித்துள்ளார். இதற்காக மாநகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை. மாநகராட்சியில் பணியாற்றிய காலத்தில் எப்படி முழு நேர படிப்பை முடித்தார் எனத் தெரியவில்லை. முறைகேடாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதனால், என்னைப் போன்ற பலரது வாய்ப்பு பறிபோயுள்ளது. எனவே, சிவபாக்கியம் சட்ட அலுவலராக செயல்பட தடை விதிக்க வேண்டும். அவரது நியமனம் செல்லாது என உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், மனு மீதான விசாரணையை மாநகராட்சி தரப்பு மற்றும் மனு தார்ர் தரப்பில் மேலும் சில ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்க விசாரனையை அடுத்த வாரம் தள்ளி வைத்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!