Home செய்திகள் ஞாபக மறதியில் சாலையில் சுற்றிய நபரை வீட்டில் கொண்டு சேர்த்த ரோந்து காவலர்கள்.

ஞாபக மறதியில் சாலையில் சுற்றிய நபரை வீட்டில் கொண்டு சேர்த்த ரோந்து காவலர்கள்.

by mohan

மதுரை எஸ் எஸ் காலனி காவல் எல்லைக்குட்பட்ட பைபாஸ் சாலை நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு பகுதியில் நேற்று மதியம் ஒரு மணி முதல் ஒரு நபர் நடக்க இயலாமல் தவழ்ந்து தவழ்ந்து அங்கேயும் இங்கேயும் சென்று கொண்டு இருந்தார் பின்னர் அங்குள்ள டயர் விற்பனை நிலையம் எதிரே அமர்ந்து உள்ளார் சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக அமர்ந்து பார்த்த கடை ஊழியர்கள் மதுபோதையில் ஏதும் இருக்கிறாரா என சோதித்தார்கள் மதுபோதையில் இல்லாததைக் கண்டு நீங்கள் யார் என கேட்டுள்ளார் அவர் உடனடியாக நான் யார் என்று தெரியவில்லை எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை எனவும் சொன்னார் அதே நிறுவனத்தில் பணியாற்றும் சமூக ஆர்வலர் காளமேகம் கூப்பிட்டு அவர் யார் என தெரியவில்லை மதியம் முதல் இங்கே இருக்கிறார் என தெரிவித்தனர் அருகில் சென்று விசாரித்தபோது அவர் பரமக்குடி என பெயர் மட்டும் சொன்னார் எனது உறவினர் ஒருவர் இங்கே உள்ளே இருக்கிறார் என்று மட்டுமே சொன்னார் பெயர் மற்றும் விவரங்களை தெரியப்படுத்த முடியவில்லை அவரால் பின்னர் சமூக ஆர்வலர் காளமேகம் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார் சம்பவ இடத்திற்கு வந்த இருந்துஎஸ் எஸ் காலனி ரோந்து காவலர் பிரபாகரன் மற்றும் ராஜ்குமார் காவலர்கள் அவரிடம் கனிவாகப் பேசி தாங்கள் யார் எங்கிருந்து வந்தீர்கள் எங்கே செல்லவேண்டும் என விசாரித்தனர் விசாரித்த பொழுது பெயர் ஞாபகம் உள்ளதா என கேட்டனர் அதற்கு அன்புநாதன் என பரமக்குடியை சேர்ந்தவர் எனவும் எனது உறவினர் ஒருவர் உள்ளே உள்ளார் என மட்டும் சொன்னார் தங்களை பரமக்குடி பஸ் ஏற்றி விட்டால் நீங்கள் சென்று விடுவார்களா என காவலர்கள் கேட்டார் ஆனால் பரமக்குடியில் நான் எங்கு உள்ளேன் என தெரியவில்லை எனவும் சொன்னார் பின் பொறுமையாக இரு ரோந்து காவலர்களும் அவரிடம் கனிவாகப் பேசி ஏன் இங்கு வந்தீர்கள் என கேட்டார் உங்கள் உறவினர் எங்கே உள்ளார்கள் என சொன்னீர்களே தங்களை நான் வாகனத்தில் அழைத்துச் செல்கிறேன் வீட்டை அடையாளம் காட்ட முடியுமா என்று என்று கேட்டார் அதற்கு அவர் தட்டுத்தடுமாறி முடியும் என்று சொன்னார் பெண் சமூக ஆர்வலரின் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவரின் வாகனத்தில் அவரை அமர வைத்து ரோந்து காவலரும் அதே நபருடன் பின் சென்றனர் வீட்டின் அருகே சென்றபோது நல்வாய்ப்பாக எதிரே உறவினர்கள் இவரை தேடி வந்துள்ளனர் ரோந்து காவலரின் அன்பான கவனிப்பால் கனிவான பேச்சிலும் ஞாபகம் வந்த நபர் அவரது உறவினர்கள் ஒப்படைக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டை ஏற்படுத்தியது காவல்துறை எப்பொழுதும் நமது நண்பர்கள் என்பதை பொதுமக்கள் உணர்ந்து செயல்பட்டால் என்றுமே காவல்துறை நமக்கு நண்பர்களே..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!