Home செய்திகள் டெல்லி டிஃபென்ஸ் அதிகாரி படுகொலையை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

டெல்லி டிஃபென்ஸ் அதிகாரி படுகொலையை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

by mohan

டெல்லி டிஃபென்ஸ் அதிகாரி ஷஃபியா ஷைஃபியின் படுகொலையை கண்டித்து வீராணத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி லஜ்பத் நகர் மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் சிவில் டிஃபென்ஸ் அதிகாரியாக பணிபுரிந்த 21 வயது பெண் சஃபியா ஷைஃபியின் படுகொலையை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரியும் தென்காசி மாவட்டம் வீராணம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் காதர் மைதீன் (எ) சேட் தலைமை தாங்கினார்.நகர செயற்குழு உறுப்பினர் சிக்கந்தர் பாதுஷா வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சர்தார் அரஃபாத், தென்காசி தொகுதி தலைவர் சீனா சேனா சர்தார், தொகுதி செயலாளர் கல்வத் கனி, நகர துணைத் தலைவர் புகாரி தங்கள்,நகரத் துணைச் செயலாளர் உதுமான் கனி,நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வீராணம் கிளை செயலாளர் நுஸ்ரத் நபிஷா மற்றும் உறுப்பினர்கள், கேம்பஸ் ஃப்ரண்ட் வீராணம் கிளை நிர்வாகிகள், எஸ்டிபிஐ கட்சியின் பள்ளிவாசல் கிளை, முத்துப்பேட்டை கிளை மற்றும் முத்தம்மாள்புரம் கிளை நிர்வாகிகள், வீராணம் ஜமாத்தார்கள், மேலும் வீராணத்தின் தோழமை அமைப்பு மற்றும் கட்சிகளான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ்,விடுதலை சிறுத்தை கட்சி, இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் யாசர் கான்,மாவட்ட பொருளாளர் செய்யது முஹம்மது, த மு மு க மாநில செயலாளர் நைனார் முஹம்மது மற்றும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட பேச்சாளர் நஸ்ரின் நிஷா ஆலிமா ஹதியா பிஎ , கேம்பஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் துரையப்பா, விடுதலை சிறுத்தை கட்சியின் பகுதி செயலாளர் திருக்குமார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் உட்பட 200 க்கும் மேலானோர் கலந்து கொண்டனர்.இதன் இறுதியில் எஸ்டிபிஐ கட்சியின் நகர செயலாளர் செய்யது இப்ராஹிம் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!